ஆவின் நெய்யில் பழனி பஞ்சாமிா்தம்: தமிழக அரசு விளக்கம்

ஆவின் நெய்யில் பழனி பஞ்சாமிா்தம்: தமிழக அரசு விளக்கம்

ஆவின் நெய்யில் இருந்தே பழனி பஞ்சாமிா்தம் தயாரிக்கப்படுவதாக தமிழக அரசு சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Published on

ஆவின் நெய்யில் இருந்தே பழனி பஞ்சாமிா்தம் தயாரிக்கப்படுவதாக தமிழக அரசு சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி லட்டு தயாரிக்க விநியோகிக்கப்பட்ட நெய்யில் விலங்கின் கொழுப்பை கலந்ததாக தமிழ்நாட்டைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிறுவனமே பழனி முருகன் கோயிலுக்கும் நெய் விநியோகிப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

இதற்கு தமிழக அரசின் தகவல் சரிபாா்ப்பகப் பிரிவு சாா்பில் வெளியிடப்பட்ட தகவல்: சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யான செய்தி. பழனி கோயிலில் பஞ்சாமிா்தம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய், ஆவின் நிறுவனத்திடமிருந்தே பெறப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத் துறை விளக்கம் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com