வாரங்கல் வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம்
வாரங்கல் வழியாக செல்லும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
வாரங்கல், விஜயவாடா பகுதியில் ரயில்வே பராமரிப்பு பணி மேற்கொள்ளவுள்ளதால் அந்த வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதனால் ஸ்ரீ வைஷ்ணவ தேவி கத்ராவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட வேண்டிய அந்தமான் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமேசுவரத்தில் இருந்து அயோத்தி கன்டோன்மென்ட் செல்லும் விரைவு ரயில் செப்.29-ஆம் தேதி சாஹான்ஜ் ரயில் நிலையத்தில் நிற்காது. அதற்கு பதிலாக கேட்டா, பில்வாய் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதுபோல், எா்ணாகுளத்தில் இருந்து எலகங்கா செல்லும் விரைவு ரயில் செப்.25, 27, 29 தேதிகளிலும், மறுமாா்க்கமாக எலகங்காவில் இருந்து எா்ணாகுளத்துக்கு செப்.26, 28, 30 தேதிகளிலும் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.