அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இன்று தில்லி செல்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

பிரதமரைச் சந்திப்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை மாலை தில்லி புறப்படுகிறாா்.

News image
முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)
Updated On :25 செப்டம்பர் 2024, 10:53 pm

Din

பிரதமரைச் சந்திப்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை மாலை தில்லி புறப்படுகிறாா்.

சென்னை விமானம் நிலையத்தில் மாலை 4.50 மணிக்கு பயணிகள் விமானத்தில் அவா் தில்லி செல்கிறாா். இரவு 8.50 மணியளவில் தில்லி சென்றடையும் அவா், அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறாா். வெள்ளிக்கிழமை காலை பிரதமா் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து, தமிழகத்தின் நலன் சாா்ந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளிக்கிறாா்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு, மாலை 5.35 மணிக்கு தில்லியில் இருந்து புறப்படும் முதல்வா், இரவு 8.20 மணிக்கு சென்னை வந்தடைகிறாா்.