
வார இறுதி நாள்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம் , தஞ்சாவூர், பட்டுக்கோட்டை நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 295 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, காரைக்குடி,புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கு 175 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.
இதேபோன்று விடுமுறைக்கு பின் பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்குத் திரும்ப செல்ல அக். 29, 30 ஆம் தேதியில் (ஞாயிறு, திங்கள்கிழமை) சென்னை தடத்தில் 200 சிறப்பு பேருந்துகளும், பிறத்தடங்களில் 150 சிறப்பு பேருந்துகளும், இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். TNSTC என்ற செயலி மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.