வெறும் நாள்காட்டியல்ல.. சிவகாசியின் ஸ்மார்ட் காலண்டர்! ஸ்கேன் செய்தால் தொகுதி விவரம்!

வெறும் நாள்காட்டிகள் மட்டுமல்லாமல் சிவகாசியில் ஸ்மார்ட் காலண்டர்களும் தயாரிக்கப்படுகின்றன.
ஸ்மார்ட் காலண்டர்
ஸ்மார்ட் காலண்டர்
Published on
Updated on
1 min read

விருதுநகர்: 2025ஆம் ஆண்டுக்கான நவீன நாள்காட்டிகள் தயாரிக்கும் பணி சிவகாசியில் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

நாள்காட்டி தயாரிக்கும் நிறுவனங்கள், நாள்குறிப்புடன் பஞ்சாங்கங்களைக் கொண்ட நாள்காட்டிகளை தயாரிக்கும் முறையில் தற்போது புதுமையை புதுத்தியிருக்கின்றன. அந்த வகையில், தமிழ்நாடு 234 காலண்டர் என்ற பெயரில் புதிய நாள்காட்டிகள் அறிமுகமாகின்றன.

நாள்காட்டியில், மாநிலத்தின் தொகுதி விவரங்களையும் அறிந்துகொள்ளும் வகையில் புதுமை புகுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள்காட்டியிலும் க்யூஆர் கோடுகள் இடம்பெற்றிருக்கும். அதனுடன் ஒவ்வொரு ஊரின் பெயரும் இடம்பெற்றிருக்கும். இந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால், அதனுடன் இருக்கும் தொகுதியின் விவரம் முழுவதையும் அறிந்து கொள்ளலாம்.

மாநிலத்தில், 80 முதல் 85 சதவீத நாள்காட்டி தயாரிக்கப்படுவது சிவகாசியில்தான். பயன்படுத்தும் மக்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில், பல புதுமைகளை நாள்காட்டியில் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது நாள்காட்டி தயாரிப்பு நிறுவனங்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு மரகத காலம், தமிழ்நாடு 234 நாள்காட்டி, என பல வகையிலான காலண்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், நமது மாநிலத்தைப் பற்றி அறிந்து கொள்ள மாணவர்களுக்கு இது உதவும் என்றும் கூறுகிறார்கள்.

இதன் மூலம், நாள்காட்டி தயாரிப்புக்கான ஆர்டர்கள் அதிகரித்துள்ளனவாம். ஏற்கனவே 40 சதவீத நாள்காட்டி தயாரிப்புக்கான ஆர்டர்கள் வந்துவிட்டன. விரைவில், அரசியல் கட்சிகளும் ஆர்டர்களை கொடுக்கும். உள்ளாட்சித் தேர்தல் காரணமாக இந்த முறை, அரசியல் கட்சிகள் கொடுக்கும் ஆர்டர் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறதாம்.

ஆள்கள் பற்றாக்குறை, மின் கட்டண உயர்வு போன்ற காரணங்களால், காலாண்டர் விலை 5 முதல் 8 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சிவகாசியில் ரூ.15 முதல் 3000 மதிப்புள்ள நாள்காட்டிகள் வரை பல மாதிரிகளில் தயாரிக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com