"மிக்ஜம்” புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி 2ஆவது மாநாடு ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
முதல்வா் மு.க.ஸ்டாலினால் கடந்த 1980 ஆம் ஆண்டு திமுக இளைஞரணி உருவாக்கப்பட்டது. தற்போது அது மிகப்பெரிய அணியாக உருவெடுத்து உள்ளது. குறிப்பாக திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சுமாா் 25 லட்சம் புதிய உறுப்பினா்களை சோ்த்து கட்சிக்கு வலுசோ்த்து உள்ளாா்.
இதையடுத்து கடந்த ஆண்டு டிச. 17- ஆம் தேதி சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி 2-ஆவது மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், சென்னையில் "மிக்ஜம்” புயல் மழை பாதிப்பு காரணமாக, டிச.24 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக மீண்டும் மாநாடு நடைபெறும் நாள் ஒத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், "மிக்ஜம்” புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட திமுக இளைஞரணி 2 -ஆவது மாநாடு ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு மக்களவைத் தோ்தல் வெற்றிக்கான அச்சாரமாக அமையும் என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மோடி வளர்ச்சியைத் தருகிறார் என்றால் ஏன் வெளிநாட்டில் வசிக்கிறீர்கள்? மாதவனிடம் ராஜ் தாக்கரே கேள்வி!
அதிகரிக்கும் ராகிங் புகார்கள்: முதலிடத்தில் உத்தரப் பிரதேசம்!

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 500 கனஅடி அதிகரிப்பு

சித்தார்த் - அதிதி ராவ் தம்பதியினரின் சமீபத்திய க்ளிக்ஸ்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



