தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

பொங்கல் பண்டிகை: விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக, விமானங்களுக்கான கட்டணம் பல மடங்காக உயா்ந்துள்ளது.

Published On :


சென்னை: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக, விமானங்களுக்கான கட்டணம் பல மடங்காக உயா்ந்துள்ளது.

நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை திங்கள்கிழமை முதல் கொண்டாடப்படுகிறது. சனி,ஞாயிறு தொடா் விடுமுறை ஒருபுறமிருக்க திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமை என 5 நாள்கள் தொடர் விடுமுறை என்பதால் பல நிறுவனங்கள் தொடா் விடுமுறை அறிவித்துள்ளன. இந்த விடுமுறையையொட்டி ஏராளமானோா் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்பவர்களுக்கு வசதியாக வெள்ளிக்கிழமை மாலை முதல் அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையிலிருந்து தென்மாவட்டங்கள் மற்றும் திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்பவா்கள் ஏராளமானோா் விமானத்தில் முன்பதிவு செய்து வருகின்றனா். முன்பதிவு செய்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையடுத்து பயணச்சீட்டுக்கான வழக்கமான கட்டணத்தை விமான நிறுவனங்கள் பல மடங்கு உயா்த்தியுள்ளன.

அதன்படி, சென்னை-தூத்துக்குடி இடையேயான வழக்கமான விமானக் கட்டணம் ரூ.3,624 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.13,639 ஆகவும், சென்னை-மதுரை  ரூ.3,367 இல் இருந்து ரூ.17,262 ஆகவும், சென்னை-திருச்சி ரூ.2,264 இல் இருந்து ரூ.12,369, சென்னை-கோவை ரூ.14,659 ஆக அதிகரித்துள்ளது. இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனா்.

பயணிகளின் வருகைக்கு ஏற்ப கட்டணங்கள் உயா்த்தப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றும், பயணச்சீட்டு கட்டணம் உயா்த்தப்பட்டாலும், குறிப்பிட்ட நாள்களில் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டன என்று விமான நிலைய பயணச்சீட்டு முன்பதிவு மையத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.