விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

அயோத்தி விழாவில் பங்கேற்றுள்ள தமிழக பிரபலங்கள்!

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலில் ராமா் சிலை பிரதிஷ்டை விழாவில் தமிழகத்தை சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

News image
Updated On :22 ஜனவரி 2024, 1:36 pm IST

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலில் ராமா் சிலை பிரதிஷ்டை விழாவில் தமிழகத்தை சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா அயோத்தி மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பல்வேறு வகைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அயோத்தியில் ஒவ்வொரு நூறு மீட்டர் தொலைவுக்கு ஒரு மேடை என அமைக்கப்பட்டு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ராமர் பாடல்கள் ஒலித்தபடி, அயோத்தி நகருக்குள் இருப்பவர்கள் அனைவரும் ராமரின் தலைநகரான அயோத்திக்குள் இருப்பதை உணர்வுப்பூர்வமாக உணரும் வகையில் அந்த இசை நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன.

திரேத யுகத்தில் வனவாசம் முடித்துவிட்டு ராமர் மீண்டும் அயோத்தி திரும்பும் போது இருந்ததைப் போலவே, அந்நகரம் பல்லாண்டு காலத்துக்கு முந்தைய காலத்துக்குத் திரும்பியிருக்கிறது. 

இந்த விழாவில் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா துறையினர், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், இந்திய கிரிக்கெட் வீரர் ரவிசந்திர அஸ்வின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முன்னாள் பிரதமர் தேவகெளடா, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், சிரஞ்சீவி, ராம் சரண், கிரிக்கெட் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் அயோத்திக்கு வருகை தந்துள்ளனர்.

இன்று நண்பகல் 12.29.08 வினாடிக்கு 121 வேதகர்கள் வேத மந்திரம் முழங்க பிராண பிரதிஷ்டை தொடங்குகிறது. அதாவது, அயோத்தி ராமா் கோயிலில் இன்று நண்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 வினாடிகளில்) 51 அங்குலம் உயரம் கொண்ட பால ராமர் சிலை அயோத்தி கோயில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

4.25 அடி உயரம் கொண்ட இந்த பால ராமர் சிலையின் அகலம் 3 அடி. மொத்த எடை 1.5 டன். மூலவர் சிலை ராமரின் வயது 5. மூலவரின் தோற்றம் பரந்த நெற்றி, வசீகரமான கண்கள், நீண்ட கைகளைக் கொண்டிருக்கிறது. சிலை வடிவமைக்கப்பட்ட கல்லானது, கர்நாடகத்தின் கருப்பு பாறைகளிலிருந்து செதுக்கப்பட்டது. ராமர் சிலையின் அடித்தளமானது தாமரையில் ராமர் நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராமர் சிலையைச் சுற்றியுள்ள பிரபையில், தசாவதாரம், ஸ்வஸ்திக் சின்னத்துடன் ஓம், சுதர்சன சக்கரம், கதாயுதம், சூரியன், சந்திரன் ஆகியவை அமைந்துள்ளன.

கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்படும்.

ராமா் கோயிலில் ஜனவரி 23-ஆம் தேதிமுதல் தரிசனத்துக்காக பக்தா்கள் அனுமதிக்கப்படுவா். ஒரு நாளைக்கு 3 லட்சம் போ் வரை தரிசனம் மேற்கொள்ள வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.