கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!முதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!உணவுப் பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி சாலையோரக் கடையில் சாப்பிட பயப்பட வேண்டாம்!வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்று சொன்னால்... ஆர்பிஐ எச்சரிக்கை
/

தொகுதிப் பட்டியலைத் தயாரிக்கவில்லை: காங். விளக்கம்

திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடுக்கான பட்டியலை இன்னும் தயாரிக்கவில்லை என காங்கிரஸ் கட்சி விளக்கமளித்துள்ளது.

News image

காங்கிரஸ் கொடி

Updated On :7 பிப்ரவரி 2024, 8:42 pm IST

மக்களவைத் தோ்தல் நெருங்கும் நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழுவை திமுகவும், மதிமுகவும் ஏற்கெனவே அறிவித்த நிலையில் அதிமுகவும் தொகுதிப் பங்கீட்டு குழுவை அறிவித்திருந்தது. 

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்காக கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக, திமுக சாா்பில் ஏற்கெனவே குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலா் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலா்கள் ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கடலூா் கிழக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

இந்தக் குழுவானது காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடா்பாக இன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பிற்பகல் 3 மணியளவில் இக்கூட்டம் துவங்கியது. பேச்சுவாா்த்தையில் காங்கிரஸ் சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சா்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குா்ஷித், தமிழகப் பொறுப்பாளா் அஜோய் குமாா் மற்றும் மாநிலப் பொறுப்பாளா்கள் கலந்துகொண்டுள்ளனர்

இந்நிலையில், இன்று காலை காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் போட்டியிட விரும்பும் 21 தொகுதிகளைக் கொண்ட பட்டியலை தயாரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அப்பட்டியலில் எந்ததெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறது என்பது குறிப்பிடப்பட்டிருந்தது.

Story image

ஆனால், தற்போது எந்தப் பட்டியலையும் தயாரிக்கவில்லை என்றும் திமுகவிடம் தொகுதிப் பட்டியலைக் கொடுப்பதாக வெளியான தகவல்கள் தவறானவை என்றும் காங்கிரஸ் கட்சி விளக்கமளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.