காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

12 ஆண்டுகளுக்கு ரூ. 5,870 கோடி... சென்னை மெட்ரோ முக்கிய ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ 2 ஆம் கட்ட பராமரிப்பு பணிகளுக்கு தில்லி மெட்ரோவுடன் ஒப்பந்தம்.

News image
Updated On :2 ஏப்ரல் 2025, 1:12 pm

DIN

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் வழித்தடம் 3 (மாதவரம் பால்பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் II மெட்ரோ வரை), வழித்தடம் 4 (கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை) மற்றும் வழித்தடம் 5 (மாதவரம் பால்பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரை) ஆகிய மூன்று வழித்தடங்கள் மற்றும் மாதவரம், பூந்தமல்லி மற்றும் செம்மஞ்சேரியில் உள்ள பராமரிப்பு பணிமனைகள் உள்பட 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் (Letter of Acceptance) தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ரூ. 5870 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பு கடிதத்தை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விகாஸ் குமாரிடம் இன்று (ஏப். 2) வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிதி இயக்குநர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் அமித் குமார் ஜெயின் (இயக்கம் மற்றும் சேவைகள்), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

ஒப்பந்தத்தின் கீழ் உள்ள பணியின் நோக்கம், இரண்டாம் கட்டத்தில் உள்ள 3 வழித்தடங்கள், மூன்று பராமரிப்பு பணிமனைகள் மற்றும் பயணிகளுக்கு சேவைகளை வழங்குதல் உள்பட இயக்கம் மற்றும் பராமரிப்பு தொடர்பான அனைத்து பணிகளும் இதில் அடங்கும்.

இதற்கான ஒப்பந்த காலம், இரண்டாம் கட்டத்தில் பயணிகளின் சேவை தொடங்கும் தேதியிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும். தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பணிகள் திருப்திகரமாக இருப்பின் மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.