டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ(UPI) மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம்.
2025-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை தேர்வர்களின் நலன் கருதியும் தெரிவுப்பணிகளை விரைவுபடுத்தவும் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில் 7,557 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்கு தெரிவு (selection) செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், நேரடி நியமனங்களில் சமூக நீதியை வலுப்படுத்த 441 பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைவு காலிப் பணியிடங்கள் (shortfall vacancies) நிரப்பப்பட்டுள்ளனர்.
தேர்வுக் கட்டணங்களை UPI மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்
ஒருமுறை பதிவிற்கானக் கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணங்களை தேர்வாணைய இணையதளத்தில் தேர்வர்கள் செலுத்துவதை எளிமைப்படுத்தும் விதமாக, யுபிஐ மூலம் செலுத்தும் வசதியை தேர்வாணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.
தேர்வர்களுக்கு தகவல்களை வழங்குதல்
தேர்வர்கள் தேர்வு தொடர்பான செய்திகள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனல் தொடங்கப்பட்டு, தகவல்கள் கடந்த பிப். 14 முதல் தேர்வர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தெரிவுப்பணிகள் நிறைவு பெற்றபின் எந்தெந்த பதவிகளுக்கு தெரிவுப்பட்டியல் நியமன அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவல் தேர்வாணையத்தின் 'X' தளம், டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் சேனல்கள் மூலமாக தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புகைப்படக் கலைஞா்கள் உள்பட 461 பணியிடங்கள்! நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
நீட் கட்டணம் திருப்பி அளிப்பு நடைமுறை தொடக்கம்! என்ன செய்ய வேண்டும்?

செங்கல்பட்டு மாவட்டத்தில் 171 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

அரசுப் பணியாளர் தனிப்பட்ட வணிகம் அல்லது வேலை செய்யலாமா?
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



