பகல் 1 வரை 25 மாவட்டங்களில் மழை தொடரும்!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...


தமிழகத்தில் உள்ள 25 மாவட்டங்களில் வியாழக்கிழமை பகல் 1 மணிவரை லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, அடுத்த மூன்று நாள்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், செங்கல்பட்டு, மதுரை, சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்து வருகின்றது.
மேலும், பகல் 1 மணிவரை செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருச்சி, கரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, ஈரோடு, நீலகிரி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...