தமிழ்நாடு காவல்துறையில் 8 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழ்நாடு காவல்துறையில் 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
அதன்படி, சென்னை காவல் கூடுதல் ஆணையராக விஜயேந்திர பதாரி, போக்குவரத்துக் காவல் கூடுதல் ஆணையராக கார்த்திகேயன், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக சந்தோஷ் குமார் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குனராக சீமா அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு
தீயணைப்புத்துறை டிஜிபியாக இருந்த ஆபாஷ்குமார் பணி ஓய்வு பெற்றதையடுத்து சீமா அகர்வால் புதிய டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.