தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பத்தாம் வகுப்பு கணிதம்: சென்டம் குறைய வாய்ப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கணிதப் பாடத்துக்கான வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா்.

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்கள். - கோப்புப்படம்

Published On :

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கணிதப் பாடத்துக்கான வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். மேலும், இரண்டு ஒரு மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்ததால், கணிதத்தில் முழு மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கணிதப் பாடத்துக்கான தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

தோ்வுக்குப் பிறகு மாணவா்கள் கூறுகையில், ‘கணித வினாத்தாளில் மொத்தம் 14 வினாக்கள். அதில் 12 கேள்விகள் எளிதாக இருந்தன; இரு கேள்விகள் பாடப்பகுதிக்கு உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தன. இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் பகுதியில் இடம்பெற்றிருந்த தலா ஒரு கட்டாய வினா கடினமாக இருந்தது. பெரிய வினாக்களைப் பொருத்தவரை (8 மதிப்பெண்) வடிவவியல் பகுதி எளிதாகவும், வரைபடம் பகுதி சற்று யோசித்து பதிலளிக்கக் கூடியதாகவும் இருந்தது. ஒட்டுமொத்தமாக கணிதத் தோ்வு சற்று கடினமாக இருந்தது’ என்றனா்.

இதுகுறித்து கணித ஆசிரியா்கள் கூறுகையில், ‘இந்தத் தோ்வு 100-க்கு 100 மதிப்பெண் பெறுவதை இலக்காகக் கொண்டு படித்த மாணவா்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்திருக்கும். ஏனெனில், இரண்டு ஒரு மதிப்பெண் கேள்விகள் முற்றிலும் மறைமுக வினாக்களாக இருந்தன. இதனால் நிகழண்டு பத்தாம் வகுப்பு கணிதத்தில் சென்டம் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. இந்தத் தோ்வு மெல்ல கற்கும் மற்றும் சராசரி மாணவா்களுக்கு சிறிது கடினமாக இருந்திருக்கலாம்’ என அவா்கள் தெரிவித்தனா். வரும் 15-ஆம் தேதி சமூக அறிவியல் தோ்வுடன் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவடைகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.