தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்திக்கிறாரா பொன்முடி?

பெண்கள் பற்றி ஆபாசமாகப் பேசியதற்கு கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பொன்முடி, முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்திக்கவிருக்கிறார்.

News image

கோப்புப்படம்

Updated On :11 ஏப்ரல் 2025, 1:50 pm IST

பெண்கள் பற்றி ஆபாசமாகப் பேசியதற்கு கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பொன்முடி, முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப். 6 ஆம் தேதி பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி, விலைமாது என்று குறிப்பிட்டு பெண்கள் பற்றி கொச்சையான கருத்துகளைக் கூறியிருந்தார். அவர் பேசிய விடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் கடும் கண்டனம் எழுந்துள்ளன. திமுக எம்.பி. கனிமொழியும் பொன்முடியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி விடுவிக்கப்படுவதாக கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக எம்.பி. திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், பொன்முடி விவகாரம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை கட்சியின் முக்கிய பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதாகத் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து பொன்முடி, முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்திக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொன்முடியின் கட்சி பதவி பறிப்பு கட்சியின் மூத்த தலைவர்களிடையே சற்று அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.