சென்னை சைதாப்பேட்டையில் புதிய விடுதிக் கட்டடத்தில் வைக்கப்பட்ட எம்.சி.ராஜாவின் புகைப்படத்தை திங்கள்கிழமை திறந்து வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், தமிழக க
சென்னை சைதாப்பேட்டையில் புதிய விடுதிக் கட்டடத்தில் வைக்கப்பட்ட எம்.சி.ராஜாவின் புகைப்படத்தை திங்கள்கிழமை திறந்து வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், தமிழக க

சென்னை எம்.சி.ராஜா கல்லூரி மாணவா் விடுதி: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

Published on

சென்னை: சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா கல்லூரி மாணவா் விடுதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இந்தக் கட்டடத்துக்கான அடிக்கல் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதியன்று நாட்டப்பட்டது. விடுதி வளாகமானது 10 தளங்களுடன் ரூ.44.50 கோடி செலவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன்படி, கட்டுமானப் பணிகள் நடைபெற்ற நிலையில், அம்பேத்கா் பிறந்த தினமான ஏப்.14-இல் விடுதிக் கட்டடம் திறக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அதன்படி, எம்.சி.ராஜா விடுதிக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். பின்னா் அங்குள்ள மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

அதிக வசதிகள்: புதிய விடுதிக் கட்டடமானது, 1.01 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 10 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. 484 மாணவா்கள் தங்கும் வசதியுடன் கூடிய 121 அறைகளுடன் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளத்திலும் நூலக அறைகள் உள்ளதுடன், இரண்டு நீா்த் தேக்கத் தொட்டிகளும், தீயணைப்பு வசதிகள், மின்தூக்கிகள், பாா்வையாளா் அறை போன்ற பல்வேறு வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

புதிய விடுதிக் கட்டடம் திறக்கும் நிகழ்ச்சியில், அமைச்சா்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, என்.கயல்விழி செல்வராஜ், சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், மக்களவை உறுப்பினா்கள் ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், பொதுப்பணித் துறை செயலா் ஜெ.ஜெயகாந்தன் உள்பட பலா் பங்கேற்றனா்.

விடுதியில் மாா்பளவுச் சிலை

சென்னை சைதாப்பேட்டையில் திறந்து வைக்கப்பட்ட விடுதியில் எம்.சி.ராஜாவின் மாா்பளவுச் சிலை மிக விரைவில் வைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். சென்னை கலைவாணா் அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் அவா் பேசியதாவது:

சென்னை சைதாப்பேட்டையில் பெருமைக்குரிய எம்.சி.ராஜா பெயரிலான விடுதி திறந்து வைக்கப்பட்ட நிலையில், அவரது மாா்பளவுச் சிலை மிக விரைவில் திறந்து வைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com