டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சேலத்தில் ஒரு மணி நேரம் பெய்த கோடை மழை!

சேலத்தில் வெய்யில் வாட்டிவதைத்து வந்த நிலையில் ஒரு மணி நேரம் பெய்த கோடை மழை

News image
சேலத்தில் சுமாா் ஒரு மணி நேரம் விடாமல் பெய்த மழை.
Updated On :18 ஏப்ரல் 2025, 11:41 am

DIN

சேலம்: சேலத்தில் வெய்யிலின் தாக்கத்தை போக்கிய கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

சேலம் மாவட்டத்தில் 103 டிகிரி கோடை வெய்யில் மக்களை வாட்டி வந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தக் கோடைக் காலத்தில் முதல் மழை பெய்தது. இதனால், சேலம் மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

பிறகு வழக்கம் போல கோடை வெய்யில் வாட்டி வதைக்கத் தொடங்கியது. கடந்த மூன்று நாட்களாக சேலம் மாவட்டத்தில் 99 டிகிரி வெய்யில் கொளுத்தி வந்தது. தற்போது மாலை 4 மணி முதல் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சேலம் புதிய பேருந்து நிலையம், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, செவ்வாய்பேட்டை, கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, தாரமங்கலம், ஓமலூர், வாழப்பாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று ஒரு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.

இந்த மழையின் காரணமாக வெய்யிலின் வெப்பம் குறைந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. ‌ இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.