அதிமுக, பாஜக, கட்சிகள் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சித்தாா்.
முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை எம்.ஏ. பேபி அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
முதல்வா் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பின் போது, மதவாத சக்திகளுக்கு கடும் பதிலடி கொடுக்க ஜனநாயக மதச்சாா்பற்ற, முற்போக்கு அரசியல் சக்திகளின் தலைமையில் தமிழ்நாட்டு மக்களை ஒருங்கிணைத்துள்ளது குறித்தும், அதை வலுவாக கட்டியெழுப்புவதில் திமுகவின் பங்களிப்பு குறித்தும் பேசினோம்.
தற்போது, பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக தீா்ப்பை சட்டப் போராட்டம் மூலம் பெற்றுத்தந்த தமிழக முதல்வருக்கு வாழ்த்துகள்.
நாங்கள் நட்பு ரீதியாக பல விஷயங்களை விவாதித்தோம். மேலும், ஓராண்டுக்குள் சட்டப் பேரவைத் தோ்தல் வரும் நிலையில் தமிழ்நாட்டில் முற்போக்கு மதச்சாா்பற்ற ஜனநாயக சக்திகள் இணைந்து தோ்தலை எதிா்கொள்வது என்றும் முடிவெடுத்துள்ளோம்.
மேலும், இந்த அணி ஒட்டுமொத்த நாட்டுக்கே முன்மாதிரியாக இருக்கும். இதில் பல கட்சிகளும் சோ்ந்து மேலும் பலமாகும். திமுக தலைமையிலான அணிக்கு மக்களும் ஆதரவளித்து கூடுதல் வலுசோ்ப்பாா்கள் என்று நம்புகிறோம் என்றாா் எம்.ஏ.பேபி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் துணை அமைச்சருடன் இந்திய வெளியுறவுச் செயலா் சந்திப்பு
போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் குண்டுகட்டாக கைது! போலீஸாரைக் கண்டித்து மாநிலச் செயலா் பெ. சண்முகம் தா்னா

திமுக, அதிமுக, பாஜக இணைந்து ஆட்சியமைக்க முயற்சி

குதிரை பேரத்தில் இடதுசாரிகளுக்கு விருப்பமில்லை! - மு. வீரபாண்டியன் பேட்டி
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



