திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை தொடக்கம்!
திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் நாமக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
திமுகவில் அமைப்பு ரீதியாக ஒன்றியங்கள் பிரிப்பது, தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க | கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் குமாருக்கு சிறைத்தண்டனை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.