அமைச்சா் மா.சுப்பிரமணியன்
அமைச்சா் மா.சுப்பிரமணியன்

புதிதாக 500 முதுநிலை மருத்துவ இடங்கள் உருவாக்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 500 புதிய முதுநிலை மருத்துவ இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்
Published on

சென்னை: தமிழகத்தில் 500 புதிய முதுநிலை மருத்துவ இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவா் வெளியிட்ட அறிவிப்பு:

மருத்துவ மேற்படிப்புகளின் தேவையை கருத்தில்கொண்டு 500 பட்ட மேற்படிப்பு இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன்படி ராமநாதபுரம், விருதுநகா், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூா், திருவள்ளூா், நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, அரியலூா், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, கரூா் ஆகிய 13 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையிலும் முதுநிலை படிப்புகளுக்கான இடங்கள் உருவாக்கப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com