இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு முதலிடம் - முதல்வர் பெருமிதம்

இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டி முதலிடம் பெற்றுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு முதலிடம் - முதல்வர் பெருமிதம்
Published on
Updated on
1 min read

இந்தியாவில் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை தமிழ்நாடு எட்டியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து, எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் திமுக அரசு. இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69 சதவிகித பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம்.

இப்போது அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19 சதவிகிதம் என மத்திய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பு, 2010 - 11ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது. இப்போது அவர்வழி திமுக ஆட்சி; இரண்டுமே கழக ஆட்சி.

2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்றபோது பலரது புருவமும் உயர்ந்தது. இது மிக உயர்ந்த இலக்கு, எப்படி சாத்தியமாகும்? என்றார்கள்.

இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: திருப்பூர் அருகே எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ரூ.1 கோடி நிதியுதவி

Summary

TN records Double digit growth after 14 years become No.1 state

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com