மதுரை தவெக மாநாட்டிற்கு காவல் துறை அனுமதி!

மதுரையில் தவெக மாநாட்டிற்கு காவல் துறை பாதுகாப்பு அனுமதி வழங்கியுள்ளது குறித்து...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மதுரையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு காவல் துறை பாதுகாப்பு அனுமதி வழங்கியுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆக. 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு, 25ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி காரணமாக தேதியை ஒத்திவைத்தனர்.

இதனிடையே, மாற்று தேதியில் மாநாடு நடத்துவதற்கு அது தொடர்பான மனுவை காவல் துறையினரிடம் கடந்த 5ஆம் தேதி பொதுச்செயலாளர் என். ஆனந்த் வழங்கினார்.

பின்னர் காவல் துறை தரப்பில் இருந்து மாநாடு நடக்க உள்ள இடம், பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கை, தொண்டர்களுக்கான வாகன நிறுத்துமிடம், உணவு, குடிநீர் வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட 42 கேள்விகள் கேட்கப்பட்டன.

இதற்கு தவெக தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மதுரையில் நடைபெற உள்ள தவெக 2-வது மாநில மாநாட்டிற்கு காவல் துறை அனுமதி வழங்கி உள்ளதாக தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தைக்கு 2 நாள் சிபிசிஐடி காவல்

Summary

The party's general secretary N. Anand has announced that the police department has granted security clearance for the TVK conference to be held in Madurai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com