ஓ.பி.எஸ்., தில்லி பயணம்!

தில்லியில் பாஜக மூத்த தலைவர்களை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓ.பன்னீர் செல்வம்
ஓ.பன்னீர் செல்வம்கோப்புப் படம்
Updated on
1 min read

அதிமுக உரிமை மீட்புக் குழு தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பாஜக மூத்த தலைவர்களை அவர் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிச., 15 ஆம் தேதி அரசியல் ரீதியாக முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாக அவர் அறிவித்திருந்த நிலையில், தில்லிக்குச் சென்றுள்ளார்.

நவ., 24 ஆம் தேதி சென்னை வேப்பேரியில் அதிமுக உரிமை மீட்புக் குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய ஓ பன்னீர் செல்வம், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் அதிமுக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதாகக் கூறியிருந்தார்.

இதனால், முன்பு இருந்ததைப் போன்று அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும் இல்லையென்றால் இந்த விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார்.

டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதேபோன்று, ஒரு மாதத்தில் அதிமுக இணையவில்லையென்றால் புதிய கட்சி உருவாக்கப்படும் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தில்லிக்கு ஓபிஎஸ் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பாஜக மூத்த தலைவர்களை சந்திக்கவுள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிக்க | பாமக தலைவராக அன்புமணி: தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிச. 4 ஆர்ப்பாட்டம் - ராமதாஸ்

Summary

O penneer selvam Delhi trip

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com