

சென்னை: டிட்வா புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால், வடசென்னைப் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வட சென்னை பகுதிகளான பெரம்பூர், வியாசர்பாடி, எம்.கே.பி. நகர், பேசின் பிரிட்ஜ், கொண்டிதோப்பு, காசிமேடு, திருவெற்றியூர் ஆகிய பல்வேறு பகுதியில் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றனர்.
இங்கு தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக தேங்கி நிற்கும் மழை தண்ணீரை அகற்றாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.
இன்று காலை சென்னை மேயர் பிரியா ,சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் இங்கு வந்து பார்வையிட்டு சென்றார். ஆனாலும் சென்னை மாநகராட்சி பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாகவும், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
மேலும் மழை நீர் தேங்கி நிற்பது மட்டுமல்லாமல், அதன் தொடர்ச்சியாக, மின் தடை அல்லது மின்சாரம் தாக்கும் பிரச்னை, கழிப்பறை பிரச்னை வீடுகளுக்குள் மழைநீர் வருவது போன்ற பிரச்னைகளையும் எதிர்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக இப்பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசியமான பொருள்களை வாங்குவதற்கு மளிகை கடைகள் கூட இல்லாதவாறு அனைத்தும் மூடப்பட்டிருப்பதால் பெரும் துயரத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும், அப்பகுதி மக்கள் பல பிரச்னைகளை சந்தித்து வருவதால், தமிழக அரசு துரிதமாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.