

சென்னை: சென்னையில் இருந்து இன்று வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய 25 இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் விமான பயணிகள் வேதனையை தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் செல்லக்கூடிய 25க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து லட்சக்கணக்கான விமான பயணிகள் வெளிநாடுகளுக்குச் சென்று வரக்கூடிய நிலையில், இன்று மட்டும் சென்னையில் இருந்து இயக்கப்படும் 25 இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதைக் கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திட்டமிட்டபடி வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமலும், சொந்த நாடு திரும்ப முடியாமலும் செய்வதறியாது விமான பயணிகள் தவித்து வருகின்றனர்.
விமானிகளுக்கான புதிய விதிமுறைகள் காரணமாக, கடந்த இரண்டாம் தேதி முதல் இண்டிகோ விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில், பல விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. இதனால் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பணி நேர கட்டுப்பாடு விதிமுறைகளை விமான போக்குவரத்து இயக்குநரகம் தற்போது மாற்றி அமைத்துள்ளது. விமான பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்ய விமானிகளுக்கான ஓய்வு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப விமான இயக்கத்தை போதுமான விமானிகள் இல்லாததால், இண்டிகோ நிறுவனம் திட்டமிட்டபடிண விமானங்களை இயக்க முடியமல் போனதுதான் வருத்தம் தரக்கூடிய விஷயமாக உள்ளதாக விமான பயணிகள் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து புறப்படும் இன்டிகோ விமானங்கள் பற்றிய முழு விவரங்கள்!
1) காலை 11:15, சென்னையில் இருந்து பெங்களூர் செல்லக்கூடிய இண்டிகோ 6 E 6892 விமானம் ரத்து
2) காலை 11: 40 அளவில் செல்லக்கூடிய இண்டிகோ விமானம் 6E 6374 அகமதாபாத் செக்யூரிட்டியில் உள்ளது
3) இன்று மதியம் 12:35 இண்டிகோ விமானம் 6E 6326. கொல்கத்தாவிற்கு செல்லக் கூடியவை 02 தாமதமாக புறப்படும்
4) 12,35 PM இண்டிகோ விமானம் 6E 0927 கோயம்புத்தூருக்கு செல்லக்கூடியவை ரத்து செய்யப்பட்டுள்ளது
5) 12,40 PM லக்னோ க்கு செல்லக்கூடிய இண்டிகோ : 0515 விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது
6) 12:45 PM சென்னையில் இருந்து இண்டிகோ 2578 விமானம் அகமதாபாத் புறப்படக்கூடிய நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது
7) 01:15 PM சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்லக்கூடிய இண்டிகோ விமானம் 0605: ரத்து செய்யப்பட்டுள்ளது
8 ) 1:45 PM சென்னையில் இருந்து சீரடி இண்டிகோ விமானம் 67 97. 02 புறப்படக்கூடிய நிலையில் தாமதமாக புறப்படும்
09) 02:45 PMசென்னையில் இருந்து மும்பை செல்லக்கூடிய இண்டிகோ விமானம் 6E 5371 ரத்து செய்யப்பட்டுள்ளது
10) 3:45 PM சென்னையில் இருந்து அகமாதாபாத் செல்லக்கூடிய இண்டிகோ 0458 விமானம் தாமதமாக புறப்படும்
11) 03:45 PM சென்னையில் இருந்து புறப்படக்கூடிய பூனே இண்டிகோ விமானம் 6E. 1083 ரத்து செய்யப்பட்டுள்ளது
12) 3;45 PM சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு செல்லக்கூடிய இண்டிகோ விமானம் E 6 0982 ரத்து செய்யப்பட்டுள்ளது
13) 3:50 PM சென்னையில் இருந்து கொயட்டுக்கு செல்லக்கூடிய இண்டிகோ விமானம் E 6 6011 ரத்து செய்யப்பட்டுள்ளது
14) 4:00PM சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்லக்கூடிய இண்டிகோ விமானம் E 06 : 2761 ரத்து செய்யப்பட்டுள்ளது
15) 4:30 PM சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு செல்லக்கூடிய இண்டிகோ விமானம் E 6 : 6158 ரத்து செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.