சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

விமானங்கள் ரத்து: வெளி மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

விமானங்கள் ரத்தானதால் வெளி மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்...
Published on

சென்னையிலிருந்து செல்லும் இண்டிகோ விமானங்கள் ரத்தான நிலையில், பயணிகள் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமை (டிச. 7) வெளிமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கடந்த சில நாள்களாக இண்டிகோ விமான சேவை முற்றிலுமாக ரத்தாகியுள்ளது. ஆகவே, பயணிகள் வசதிக்காக தெற்கு ரயில்வே சாா்பில் சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தெலங்கானா, ஆந்திரம்: அதன்படி, தெலங்கானா மாநிலம் சாா்லபள்ளியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (டிச.7) மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06019) மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும்.

அதேபோல், சென்னை எழும்பூரிலிருந்து டிச. 7-இல் பிற்பகல் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07147) மறுநாள் அதிகாலை 3 மணிக்கு ஆந்திர மாநிலம் செகந்திராபாத் சென்றடையும். அந்த ரயில் கூடூா், நெல்லூா், தெனாலி, விஜயவாடா வாரங்கல், காஜிபேட் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

பெங்களூருக்கு சிறப்பு ரயில்: பெங்களூருவிலிருந்து டிச. 7-ஆம் தேதி காலை 8.05 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06255) மறுநாள் இரவு 11.45 மணிக்கு எழும்பூா் வந்தடையும். இந்த ரயில், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com