காந்தமாய் ஈர்ப்பதால் பெயரிலேயே காந்தம்: ரஜினிக்கு சீமான் வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளுக்கு சீமானின் வாழ்த்துச் செய்தி.
ரஜினியுடன் சீமான்.
ரஜினியுடன் சீமான்.
Updated on
1 min read

நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சீமான் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

”தன்னுடைய தனித்துவமிக்க நடிப்பாற்றலாலும், தனக்கே உரித்தான நடையுடை, பாவனைகளாலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூன்று தலைமுறையினரை காந்தமாய் ஈர்ப்பதால் தான் என்னவோ அவரது பெயரிலேயே காந்தம் வந்ததமைந்ததோ என்று எண்ணும் அளவிற்குப் பெயருக்குப் பொருத்தமாய் வாழும் மேதை..!

இந்தியப் பெருநாட்டைக் கடந்து, உலகம் முழுக்க தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கும் அளவிற்கு வல்லமை படைத்த திரை ஆளுமை..!

தமிழ்த்திரையுலகில் எல்லோராலும் கொண்டாடப்படும் உச்ச நட்சத்திரமாக அரை நூற்றாண்டாகத் திகழும் பெருமதிப்பிற்குரிய ரஜினிகாந்த்தின் 75 வது பிறந்தநாளில் அன்புநிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.

இன்றைய நாளில் நம் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்து மாபெரும் வெற்றிப்படைப்பாக சாதனை படைத்த 'படையப்பா' திரைப்படம் மறுதிரையிடப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியையும், திரையில் மீண்டும் காண வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றது.

அதோடு, படையப்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 'நீலாம்பரி' என்ற பெயரில் உருவாவது குறித்த ரஜினிகாந்த்தின் முன்னறிவிப்பும் பேராவலைத் தூண்டுகிறது. அத்திரைப்படமும் விரைவில் வெளியாகி மாபெரும் வெற்றிப்படைப்பாக அமைய என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!

தமிழ் மக்களின் பேரன்பையும், நன்மதிப்பையும் பெற்ற மாபெரும் திரை ஆளுமை பெருமதிப்பிற்குரிய ரஜினிகாந்த்திற்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

actor Rajinikanth birthday greetings seeman

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com