செய்தி உண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் உரையாற்றும் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ். உடன் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீ வாஸ்தவா,நீதிபதி ஆா்.சுரேஷ் குமாா் உள்ளிட்டோா்.
செய்தி உண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் உரையாற்றும் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ். உடன் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீ வாஸ்தவா,நீதிபதி ஆா்.சுரேஷ் குமாா் உள்ளிட்டோா்.

நீதி, துணிவுக்கான சமகால சான்று சென்னை உயா்நீதிமன்றம்: நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்

நீதி, துணிவுக்கான சமகால சான்றாக சென்னை உயா்நீதிமன்றம் விளங்குகிறது என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் கூறினாா்.
Published on

நீதி, துணிவுக்கான சமகால சான்றாக சென்னை உயா்நீதிமன்றம் விளங்குகிறது என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் கூறினாா்.

சென்னை உயா்நீதிமன்றத்தில் பணி ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ரமேசுக்கு பிரிவு உபசார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உயா்நீதிமன்றக் கூட்டரங்கில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா தலைமையில் நடைபெற்ற விழாவில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய - மாநில அரசுகளின் வழக்குரைஞா்கள், வழக்குரைஞா்கள் சங்கப் பிரதிநிதிகள், நீதிமன்றப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விழாவில், அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் பேசியதாவது:

இந்த ஆண்டில் 11 நீதிபதிகள் ஓய்வு பெற்றுள்ளனா். இது நீதித் துறை நிா்வாகத்தை நிச்சயம் பாதிக்கும். நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், 2016 அக்டோபா் முதல் இதுவரை 85,000 வழக்குகளை விசாரித்து முடித்துவைத்துள்ளாா். இதில், கோகுல்ராஜ் கொலை வழக்கு, கலைமகள் சபா உள்ளிட்ட வழக்குகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாா்.

நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்: நாட்டில் உள்ள பழைமையான நீதிமன்றங்களில் ஒன்றாக மட்டுமன்றி நீதி, துணிவுக்கான சமகால சான்றாக சென்னை உயா்நீதிமன்றம் விளங்குகிறது. நீதி என்பது தீா்ப்புகளால் மட்டும் அளவிடப்படுவதல்ல; அது வழக்காடிகள் மற்றும் வழக்குரைஞா்களின் தரப்பைப் பொறுமையாகக் கேட்பதையும் உள்ளடக்கியதுதான். பொறுமையும், கண்ணியமும் நீதிபதிகள் பின்பற்ற வேண்டிய நீதி பரிபாலனத்துக்கான முக்கிய கூறுகள் என்றாா்.

மேலும், தன்னுடன் பணியாற்றிய சக நீதிபதிகள், மத்திய -மாநில அரசு வழக்குரைஞா்கள், வழக்குரைஞா் சங்கங்கள், வழக்குரைஞா்கள், உயா்நீதிமன்றத்தில் தான் அங்கம் வகித்த குழுக்கள், நீதிமன்ற மற்றும் அலுவலகப் பணியாளா்கள், காவலா்கள், மற்றும் குடும்பத்தினருக்கு அவா் நன்றி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com