

நாட்டைக் காக்கும் பொறுப்பு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உள்ளது என திமுக எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார்.
பாசிசத்திற்கு எதிரான முதல் குரலாக மு.க. ஸ்டாலினின் குரல் இருப்பதாகவும், அதன் பிறகு பலபேர் அதனைப் பின்பற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையில் வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பெயரில் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு இன்று (டிச., 29) நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
எலோரும் பாராட்டக்கூடிய, எதிரிகள் அச்சப்படக்கூடிய முதல்வர் நமது முதல்வர். உயர்கல்விக்கு செல்லக்கூடிய பெண்கள் சராசரியில் நாம் வளர்ந்த நாடுகளுக்கு நிகராக இருக்கிறோம்.
பாதுகாப்பான மாநிலம் என்பதால், அதிகமாக வேலைக்குச் செல்லும் பெண்கள் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதற்கு உதாரணங்களாக பல சம்பவங்கள் நாட்டில் நடந்துள்ளன.
உங்களிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைத்திருக்கிறோம் என்பதற்கான அரசமைப்பு புத்தகம் பரிசளித்திருக்கிறோம். தமிழ்நாட்டை மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 1.30 கோடி சகோதரிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை தரப்படுகிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம் என்பதை சகோதரிகள் சொவார்கள் எனப் பேசினார்.
கல்லுரிக்குச் செல்லும் ஏழைப் பெண்களின் கல்வி தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக புதுமைப்பெண் திட்டம். நாட்டில் 47% பெண்கள் பணிக்குச் செல்லும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் கல்வி, பயிற்சி என அதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
கோவை, கரூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் 2,282 பேர் புத்தாக்கத் தொழில் (ஸ்டார்ட் அப்) தொடங்கியுள்ளனர். இதில் 56% பெண்கள். இதனை உறுதி செய்தது திமுக ஆட்சி. உயர்கல்விக்குச் செல்லக்கூடிய பெண்களின் சதவீதம் 48%.
படித்து முடித்து வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக தோழி விடுதிகள் உருவக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டைப் பார்த்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகின்றனர்.
அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றம் என்ன என்று நமக்கு தெரியும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக நின்றது நமது முதல்வர் குரல் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.