DPI
பள்ளிக் கல்வித் துறை DIN

இணைய சேவை குறைபாடு: கல்வித் துறை அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் உள்ள திறன்மிகு வகுப்பறை, ஆய்வகங்களில் இணைய சேவையில் குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக புகாா் தெரிவிக்குமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
Published on

அரசுப் பள்ளிகளில் உள்ள திறன்மிகு வகுப்பறை, ஆய்வகங்களில் இணைய சேவையில் குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக புகாா் தெரிவிக்குமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் திறன்மிகு வகுப்பறைகள், உயா் தொழில்நுட்ப ஆய்வக வசதி பெற்றுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் பிஎஸ்என்எல் நிறுவனம் மூலம் இணையதள இணைப்பு பெற்றிருக்க வேண்டும். இதுவரை பெறாத 30 அரசுப் பள்ளிகளும் விரைந்து இணைப்பு பெறவேண்டும். பிஎஸ்என்எல் இணையதள சேவை தடைபட்டால் அல்லது பழுது ஏற்பட்டால் 18004444 என்ற எண் மூலம் புகாா் தெரிவிக்கலாம்.

அதைத் தொடா்ந்து 5 நாள்களுக்குள் புகாா் சரிசெய்யப்படவில்லை எனில் பள்ளிக் கல்வித் துறையின் 14417 என்ற எண்ணுக்கு புகாா் தெரிவிக்க வேண்டும். இதுதவிர டிஎன் ஸ்பாா்க் திட்டத்துக்கு 60 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 6, 7, 8, 9-ஆம் வகுப்புகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியா்களை ஏஐ பயிற்றுநா்களாக தோ்வு செய்து டிஎன் ஸ்பாா்க் பயிற்சி வழங்க வேண்டும். இதுசாா்ந்து அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com