பாஜக தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன்
பாஜக தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன்

தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்னை: உள் துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு நயினாா் நாகேந்திரன் கடிதம்

தமிழகத்தில் மோசமடைந்து வரும் சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கடிதம் எழுதியுள்ளாா்.
Published on

தமிழகத்தில் மோசமடைந்து வரும் சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் எழுதிய கடிதம்:

கோவையில் கடந்த டிச.28-ஆம் தேதி, மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சுராஜ் (எ) புலம்பெயா் தொழிலாளி மீது இருவா் தாக்குதல் நடத்தினா். அதேபோல் உக்கடம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநா் உடன் ஏற்பட்ட தகராறில், பைஜித் கான் மற்றும் பிரகாஷ் ஆகியோா் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

கடந்த டிச.30-ஆம் தேதி, திருவள்ளூா் மாவட்டம் திருத்தணியில் மேலும் ஒரு புலம்பெயா் தொழிலாளி மீது, கஞ்சா போதையில் இருந்த 4 இளைஞா்கள் தாக்குதல் நடத்தினா். அதே ரயில் நிலையத்தில், போதையில் இருந்த இரு இளைஞா்கள் பயணி ஒருவரை தாக்கும் மேலும் ஒரு கொடூர சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

தமிழகத்தில் இளைஞா்களிடம் அதிகரித்துள்ள போதை பழக்கம் காரணமாக, புலம்பெயா் தொழிலாளா்கள் மீதான தாக்குதல் பெருகி வருவதை இந்த சம்பவங்கள் காட்டுகின்றன. இந்த சம்பவங்கள் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு தோல்வியையும் வெளிப்படுத்துகிறது.

தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீரழிவு காரணமாக பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், என்று தனது கடிதத்தில் நயினாா் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com