பட்ஜெட் ஒரு மாயாஜால அறிக்கை: இபிஎஸ் விமர்சனம்!

பட்ஜெட் குறித்து இபிஎஸ் வெளியிட்ட கருத்து பற்றி..
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Published on
Updated on
1 min read

மத்திய பட்ஜெட் ஒரு மாயாஜால அறிக்கையாகும். வார்த்தை ஜாலங்கள் நிறைந்ததாகத் தோன்றுகிறது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து எட்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்துள்ளார். நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மக்களவையில் 1 மணி நேரம், 15 நிமிடங்களில் அவர் தாக்கல் செய்து முடித்தார்.

இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்று ஒரு வார்த்தையைக் கூட நிதியமைச்சர் பேசவில்லை என்று அரசியல் தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறனர்.

இதுதொடர்பாக எடப்பாடி எக்ஸ் தளத்தல் வெளியிட்ட பதிவில்,

தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் எந்த சிறப்பு திட்டமும் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. விவசாய வளத்தைப் பெருக்க நதிநீர் இணைப்பு திட்டங்கள் குறித்தும் எந்தவித அறிவிப்பும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

அதேசமயம், வருமான வரி விலக்கு உயர்வு வரவேற்கத்தக்கது. மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு கணிசமாக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்கது.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்த அடிப்படை சுங்கவரியில் மாற்றம் அறிவிக்கப்பட்டது வரவேற்பு அளித்துள்ளது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அறிவிப்பு இல்லாதது தமிழ்நாட்டுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிகார் மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு அம்மாநிலத்திற்கு மட்டும் பல வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளதால், மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை என கூறுவதை விட, பிகார் மாநில வரவு - செலவு நிதிநிலை அறிக்கை என கருதும்படி அமைந்துள்ளது இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com