தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ராமநாதபுரம்: 2026 ஜனவரிக்குள் ஸ்போர்ட்ஸ் அகாதெமி- உதயநிதி

2026 ஜனவரிக்குள் பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் ஸ்போர்ட்ஸ் அகாதெமி அமைய இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

News image
ராமநாதபுரம் மாவட்டம், பிரப்பன்வலசை கிராமத்தில் சர்வதேச தரத்திலான வாட்டர் ஸ்போர்ஸ் அகாதெமி அமைக்கப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதை ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எஸ்.ராஜகண்ணப்பன்.
Updated On :2 பிப்ரவரி 2025, 11:26 am

DIN

ராமநாதபுரம்: 2026 ஜனவரிக்குள் பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் ஸ்போர்ட்ஸ் அகாதெமி அமைய இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் ரூ.42.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாதெமி பயிற்சி மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுன் பேசியதாவது:

சென்ற ஆண்டு 2024 – 25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரப்பன்வலசை கிராமத்தில் சர்வதேச தரத்திலான (இண்டர்நேசனல் ஸ்டாண்டர்டு) வாட்டர் ஸ்போர்ஸ் அகாதெமி அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தோம். முதல்வர் இதற்காக ரூ.42.90 கோடி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுருந்தார்கள்.

6 ஏக்கர் நிலத்தில் இந்த வாட்டர் ஸ்போர்ட்ஸ் அகாதெமி அமைக்க கடந்த ஜனவரி 7 ஆம் தேதி சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக அதற்கான பணிகளை துவக்கி வைத்தோம்.

இந்த நிலையில், இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரப்பன்வலசை பகுதிக்கு வந்து ஆய்வுகளை நானும், அமைச்சர்களும், மாவட்ட ஆட்சித்தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஆய்வு செய்துள்ளோம்.

இது கடற்கரை அருகே அமையவுள்ள காரணத்தால், கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியை பெற வேண்டிய சூழல் இருந்தது. தற்போது அதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதால் இந்த பணிகளை விரைந்து தொடங்க திட்டமிட்டு உள்ளோம். வருகின்ற பிப்ரவரி 5 -ஆம் தேதி இந்த பணிகளை துவங்க இருக்கின்றோம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள்ளாக இந்த ஸ்போர்ட்ஸ் அகாதெமி அமைய இருக்கின்றது.

இந்த புதிய அகாதெமியில் தங்குமிட வசதி (ஹாஸ்டல்), ஜிம், வாட்டர் ஸ்போர்ஸ் சென்டர், செயில் போட் பார்க்கிங் , போட் ஹாங்கர், வேர்ல்டு கிளாஸ் டிரையினிங் கம் கோச்சிங் அகாதெமியும் அமைய இருக்கின்றது.

இந்த அகாதெமியில் செயிலிங், கேனோயிங், சர்ப்பிங், கயாக்கிங் மற்றும் ஸ்டாண்ர்டப் பேடில் போன்ற விளையாட்டுகளுக்கு உலகத் தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சென்னையில் ஆண்டுதோறும் உலக சர்ப்பிங் லீக் நடக்கின்றது. உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் அலைச்சறுக்கு விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றார்கள்.

இங்கேயும் தனியார் விளையாட்டு பயிற்சி மையம் பயிற்சி அளிப்பதுடன் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றார்கள் என்று துணை முதல்வர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.