அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக உறுப்பினராக உள்ள சி. விஜயபாஸ்கர் மீது, அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.
இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆஜராகவில்லை.
இதையடுத்து,வழக்கு விசாரணையை வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக ஆதரவோடு முதல்வராக நினைத்தார் இபிஎஸ்: முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்

தவெக வெற்றி பெறுமா? அதிமுக முன்னாள் அமைச்சர் பதில்

எம்எல்ஏ, முன்னாள் எம்பி மீதான தோ்தல் விதிமீறல் வழக்கு தள்ளுபடி

அமைச்சா்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகள் ஒத்தி வைப்பு
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



