இபிஎஸ் விழா புறக்கணிப்பு? - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

அத்திக்கடவு - அவிநாசி திட்டக் குழு நடத்திய பாராட்டு விழாவை புறக்கணிக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
Published on
Updated on
1 min read

அத்திக்கடவு - அவிநாசி திட்டக் குழு நடத்திய பாராட்டு விழாவை புறக்கணிக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோட்டில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தாவது, அத்திக்கடவு - அவிநாசி திட்டக் குழு ஏற்பாடு செய்திருந்த குழுவைச் சேர்ந்தவர்கள் மூன்று நாள்களுக்கு முன்பு என்னைச் சந்தித்தார்கள்.

அப்போது அவர்களிடம், எங்களை உருவாக்கிய எம்ஜிஆர், ஜெயலலிதாவின் திருவுருவப் படங்கள் இல்லை. எங்களிடம் கலந்தாலோசித்திருந்தால் நான் அதை உங்கள் கவனித்திற்கு கொண்டு வந்திருப்பேன் என்றேன்.

அத்திக்கடவு திட்டத்தை கொண்டுவர 2011இல் ஜெயலலிதா ரூ.3.72 கோடி அளித்தார். திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் பேனர்கள், அழைப்பிதழ்களில் இல்லை. அத்திக்கடவு-அவிநாசி திட்டக் குழு நடத்திய பாராட்டு விழாவை புறக்கணிக்கவில்லை.

எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

இனி விரல் நுனியில் செய்திகள்! அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடுதிரை வசதி

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்ததற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளி பிரிவில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது.

விழாவுக்கு அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம்.ஆர். நட ராஜ் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அத்திக்கடவு- அவிநாசி திட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் வடவள்ளி கணேசன், சாலையூர் நடராஜ், வெள்ளிங்கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு நடத்திய இந்த பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதனால் அவர் விழாவை புறக்கணித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com