முதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்துநானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

வியாபாரத்தில் மட்டும் மும்மொழிக் கொள்கை தேவையா? தவெக தலைவர் விஜய்க்கு தமிழிசை கேள்வி!

சினிமாவில் மட்டும் மும்மொழிக் கொள்கை தேவையா? என்று தவெக தலைவர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

News image
Updated On :16 பிப்ரவரி 2025, 7:33 pm IST

மும்மொழிக் கொள்கை குறித்து தவெக தலைவர் விஜய் கருத்துகள் சொல்லக் கூடாது என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

சென்னை அம்பத்தூரில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ஜி.பாஸ்கரின் அறிமுக கூட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார். கூட்டத்தினைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசுகையில் மும்மொழிக் கொள்கை குறித்த தவெக தலைவர் விஜய்யின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.

செய்தியாளர்களுடன் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது, ``மும்மொழிக் கொள்கை குறித்து நடிகர் விஜய் கருத்து சொல்லக்கூடாது. அப்படி சொல்வதென்றால், தனது படங்களை தமிழில் மட்டும்தான் வெளியிடுவேன் என்று அவர் முதலில் சொல்ல வேண்டும். நடிகர் விஜய்யின் திரைப்படம் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில்கூட வெளியாகிறது. உங்கள் வியாபாரத்துக்கு மட்டும் மும்மொழிக் கொள்கை தேவை; ஆனால், மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுக் கொள்ளக் கூடாதா?

மும்மொழிக் கொள்கையில் தாய்மொழிக்குத்தான் முதன்மையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியெனில் தமிழ்நாட்டில் தமிழ் கற்பதை திமுகவினர் எதிர்க்கிறார்களா? என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பினார். மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியை தடுப்பது மத்திய அரசு அல்ல; தமிழக அரசுதான்.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் பல பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கற்பிக்கப்படும்போது, அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும் மூன்று மொழிகளைப் படிக்கக் கூடாதா? திமுக குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளிலும்கூட மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.

அன்றாடம் மாறிவரும் உலகில் மாணவர்கள் கூடுதலான மொழியைக் கற்றுக் கொள்வதால் உங்களுக்கு என்ன பிரச்னை? ஒரு சாதாரண அரசுப் பள்ளி மாணவர் இந்தி மட்டுமில்லாமல், தெலுங்கோ மலையாளமோகூட கற்றுக் கொண்டால் ஆந்திரம் அல்லது கேரளத்திலும்கூட வேலைவாய்ப்பைப் பெறலாம்’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.