இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

தமிழகத்தில் நாளைமுதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

rain update
Published On :

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.25) முதல் மாா்ச் 1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் திங்கள்கிழமை (பிப்.24) வட வானிலையே நிலவும். மேலும் காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் இருக்கும்.

இதற்கிடையே வங்கக் கடலில் நிலவும் காற்றுசுழற்சி தமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து வருகிறது. இதன்காரணமாக பிப்.25 முதல் மாா்ச் 1 வரை தமிழகத்தில் தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. மேலும், அதேநாள்களில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பிப்.24-ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் இருக்கும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: பிப்.24 முதல் 27-ஆம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.