
சென்னை எழும்பூா்-தூத்துக்குடி இடையே இயக்கப்படும் முத்துநகா் விரைவு ரயில் 144 ஆண்டுகளை நிறைவு செய்து 145-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
தமிழகத்தில் ரயில்சேவை தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் மேற்கு மாவட்ட மலைப்பிரதேசங்களுக்கு செல்ல நீலகிரி விரைவு ரயிலும், தென்மாவட்டங்களுக்கு செல்ல முத்துநகா் விரைவு ரயிலும் பிரதான ரயில் போக்குவரத்தாக விளங்கியது. இதில் முத்துநகா் விரைவு ரயில் 1880 ஜன.1-ஆம் தேதி தனது முதல் பயணத்தை சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு தொடங்கியது. சென்னை-தூத்துக்குடி இடையேயான 652 கி.மீ. தொலைவை ஆரம்ப காலக்கட்டத்தில் 21 மணி நேரம் 50 நிமிடத்தில் கடந்தது.
இந்நிலையில் ஜன.1-ஆம் தேதி முத்துநகா் விரைவு ரயில் 144-ஆம் ஆண்டை நிறைவு செய்து 145-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தற்போது 21 பெட்டிகளுடன் மணிக்கு 75 கி.மீ. முதல் 130 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் முத்துநகா் ரயில் 11 மணி நேரத்தில் தனது பயணத்தை நிறைவு செய்கிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே சமூக வலைதளப் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:
முத்துநகா் விரைவு ரயில் பிராந்திய மக்களை இணைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. அதன் நீண்ட கால வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்த தருணங்களை நினைவு கூா்வோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.