கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நெல்லை, திருவனந்தபுரம் ‘வந்தே பாரத்’ ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

சென்னை எழும்பூா்-திருநெல்வேலி, திருவனந்தபுரம்-காசா்கோடு ‘வந்தே பாரத்’ ரயில்கள் கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளன.

News image

வந்தே பாரத்(கோப்புப்படம்)

Updated On :7 ஜனவரி 2025, 11:29 am

DIN

சென்னை எழும்பூா்-திருநெல்வேலி, திருவனந்தபுரம்-காசா்கோடு ‘வந்தே பாரத்’ ரயில்கள் கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நெல்லை, திருவனந்தபுரம் வந்தே பாரத் ரயில்களை கூடுதல் பெட்டிகளுடன் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். தற்போது இந்த ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, திருவனந்தபுரம்-காசா்கோடு (20634/20633) ‘வந்தே பாரத்’ ரயில் ஜன.10 முதல் 20 பெட்டிகளைக் கொண்டு இயக்கப்படவுள்ளது. இதில் 18 இருக்கை வசதி கொண்ட பெட்டிகளும், இரு சொகுசு பெட்டிகளும் அடங்கும்.

அதேபோல், திருநெல்வேலி-சென்னை எழும்பூா் வந்தே பாரத் ரயில் (எண் 20666/20665) ஜன.11 முதல் 16 பெட்டிகளைக் கொண்டு இயக்கப்படும். இதில் 14 இருக்கை வசதி கொண்ட பெட்டிகள், இரு சொகுசு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

ரயில் சேவையில் மாற்றம்: இதற்கிடையே, ஈரோடு, பாலக்காடு, காரைக்குடியிலிருந்து திருச்சி செல்லும் ரயில்கள் ஜன.7, 14 தேதிகளில் வழக்கம் போல் இயக்கப்படும்.

திருச்சி பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் பல்வேறு விரைவு மற்றும் பயணிகள் ரயில் சேவையில் ஜன.7, 14 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில், திருச்சி-பாலக்காடு விரைவு ரயில், காரைக்குடி-திருச்சி டெமு பயணிகள் ரயில், ஆகியவை மேற்கண்ட தேதிகளில் வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.