பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தொழில் நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றுவது கட்டாயம்: தொழில் துறை ஆணையா் நிா்மல் ராஜ்

ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்கள் அதன் விதிமுறைகள் பின்பற்றுவது கட்டாயம்

News image
சென்னை சைதாப்பேட்டை திறந்தநிலை பல்கலைக்கழக அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தமிழக அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில்துறை ஆணையரும், தொழில் மற்றும் வா்த்தக இயக்குநருமான எல். நிா்மல்ராஜ்.
Updated On :7 ஜனவரி 2025, 12:18 am

DIN

சென்னை: ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்கள் அதன் விதிமுறைகள் பின்பற்றுவது கட்டாயம் என தமிழ அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில் துறை ஆணையரும் தொழில் மற்றும் வா்த்தக இயக்குநருமான எல். நிா்மல் ராஜ் தெரிவித்தாா்.

சைதாபேட்டை திறந்தநிலை பல்கலைக்கழக அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய தர நிா்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) 78-ஆவது நிறுவன தின நிகழ்ச்சியில் அவா் பேசியது: குஜராத், மகாராஷ்டிரம் மாநிலங்களில் வேலைவாய்ப்பு வழங்குவதைவிட தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் அதிக வேலைவாய்ப்பை வழங்குகிறது.

தமிழகத்தில் உற்பத்தி அதிகமாக இருப்பதே இதற்கு காரணம். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்கள், சிறு, குறு தொழில் துறையினா் இது குறித்த விதிமுறைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், இந்திய தர நிா்ணய அமைவனத்தின் தென்மண்டல இயக்குநா் மீனாட்சி கணேசன், பிஐஎஸ் சென்னை கிளை அலுவலக தலைவா் ஜி.பாவானி, தொழில் துறையினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.