விராலிமலையில் 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை!

விராலிமலை 5 ஆயிரம் பெண்கள் குத்து விளக்குடன் பங்கேற்ற திருவிளக்கு பூஜை
தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற விளக்கு பூஜை வழிபாடு செய்த பெண்கள்
தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற விளக்கு பூஜை வழிபாடு செய்த பெண்கள்
Published on
Updated on
1 min read

விராலிமலை: விராலிமலை அம்மன் கோயிலில் மார்கழி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் திருவிளக்கு பூஜையின் 7-வது பூஜை இன்று அதிகாலை கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

இதில் 5 ஆயிரம் பெண்கள் குத்து விளக்குகளுக்கு பூஜை செய்து தங்கள் வழிபாட்டை நிறைவேற்றினர்.

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் சிறப்பு பெற்ற தலமாகும். சுற்றுப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும் குலதெய்வமாகவும் விளங்கும் அம்மன் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது.

அதன் ஒரு நிகழ்வாக மார்கழி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை நடைபெறும் திருவிளக்கு பூஜையின் ஏழாவது பூஜை இன்று அதிகாலை நடைபெற்றது.

இதில் 5 ஆயிரம் பெண்கள் தங்கள் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த குத்து விளக்குகளுடன் கோயில் வளாகத்தில் நேர்த்தியாக அமர்ந்து அம்மன் பக்தி பாடல்களை பாடி விளக்கு பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com