மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

உத்திரமேரூர் ஏரியில் 3 இளைஞர்களின் உடல்கள்! நடந்தது என்ன?

உத்திரமேரூர் ஏரியில் 3 இளைஞர்களின் உடல்களைக் கைப்பற்றிய காவல்துறை விசாரணை

News image
ஏரி - பிரதி படம்
Updated On :15 ஜனவரி 2025, 12:45 pm

DIN

உத்திரமேரூர் அருகே ஏரிக்கரை தாங்கலில் மூன்று பள்ளி மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மூன்று இளைஞர்களின் முகங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டு வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், உத்திரமேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் காட்டாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட விழுதவாடி கிராமம் அருகே ஏரிக்கரை தாங்கலில் மூன்று நபர்கள் முகத்தை எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மிதப்பதாக உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்து.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ், உத்திரமேரூர் பொறுப்பு காவல் ஆய்வாளர் சங்கர் சுரேஷ், உத்திரமேரூர் காவல் உதவி ஆய்வாளர் மாரி செல்வம் மற்றும் உத்திரமேரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் சடலத்தை மீட்டனர்.

இதனிடையே, இறந்த நபர்கள் பழையசீவரம் கிராமத்தைச் சேர்ந்த விஷ்வா (17), சத்ரியன் (17), பரத் (17) என்பதும் மூன்று பேரும் வாலாஜாபாத் அருகே உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

இறந்த நபர்கள் மூன்று நாளுக்கு முன்பு கொல்லப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

மேலும், உத்திரமேரூர் அருகே குற்ற வழக்கில் தொடர்புடைய சிறுமையிலூர் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் என்பவர், பழையசீவரம் கிராமத்தைச் சேர்ந்த பரத் என்பவருடன் பிரச்னை செய்து, வாக்குவாதம் செய்ததாக சொல்லப்படுகிறது.

இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழுக்குப்பதிவு செய்து உடல்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.