
புதுக்கோட்டை அருகேயுள்ள வடமலாப்பூரில் பொங்கல் பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காளைகள் விறுவிறுப்பாக வாடிவாலில் இருந்து சீறிப்பாய்ந்து வருகின்றன. காளையர்கள் அவற்றைப் போட்டி போட்டுக் கொண்டு தழுவ முயற்சித்து வருகின்றனர்.
ஒரு காளையும் அதனைத் தழுவ முயற்சித்த காளையரும் உருண்டுபுரண்ட சம்பவம் மெய்சிலிர்க்கச் செய்தது.
பிற்பகல் 3 மணி வரைரை சுமார் 600 காளைகள் அவிழ்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 230 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.