தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நான்கு ஆண்டுகளில் மதுரை மெட்ரோ ரயில் திட்டம்: மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர்

திட்டம் உறுதி செய்யப்பட்டு, நான்கு ஆண்டுகளில் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் பயன்பாட்டுக்கு வரும் என மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் தகவல்

News image
மெட்ரோ ரயில் - கோப்புப்படம்
Updated On :17 ஜனவரி 2025, 12:29 pm

DIN

மதுரை ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை ஒருங்கிணைக்கவே சிறிய மாற்றங்கள் செய்யப்படுகிறது என மெட்ரோ ரயில் திட்ட நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார்.

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் முதல் கட்டமாக 11,368 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கி.மீ. தூரத்துக்கு வழித்தடம் அமைக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில், மதுரை ரயில் நிலையத்திற்கு அருகே வரும் சுரங்க மெட்ரோ ரயில் நிலையத்துக்கான இருப்பிடத்தை தேர்வு செய்வது, இரு ரயில் நிலையங்களை ஒருங்கிணைப்பத்து குறித்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் திட்ட நிர்வாக இயக்குநர் சித்திக் மற்றும் திட்டப்பணிகள் இயக்குநர் அர்ச்சுனன் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று இடத்தை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, மதுரை மாநகருக்கு மெட்ரோ ரயில் திட்டம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் மதுரை ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிற நிலையில், மெட்ரோ ரயில் நிலையமும் இங்கு வர இருக்கிறது என்றார்.

எனவே, இரண்டு நிலையத்தையும் ஒருங்கிணைத்து அமைக்க ரயில்வே நிர்வாக முதன்மை துணை பொறியாளர் மற்றும் மெட்ரோ திட்ட இயக்குனருடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே குறுகிய இடைவெளியில் பொதுமக்கள் ஒரு (மெட்ரோ to தென்னக ரயில்வே) நிலையத்திலிருந்து மற்றொரு நிலையத்திற்கு சுலபமாக சென்று வர ஏதுவாக அமைப்பது குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது.

மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்க அறிக்கையை சமர்ப்பிக்கும் போது மதுரை ரயில் நிலைய மறுசீரமைப்பு குறித்த அறிக்கை முழுமையாக இல்லை, தற்போது இரண்டு திட்டங்களும் சிறு மாற்றங்கள் செய்து ஒருங்கிணைக்க ஏதுவாக திட்டமிடப்பட உள்ளது.

மத்திய அரசு ஒப்புதல் அளித்த சில மாதங்களில் கட்டுமான பணிகள் துவங்கப்படும். பணிகள் தொடங்கி ரயில் சேவை நான்கு வருடங்களில் நிறைவடையும்.

மதுரை மற்றும் கோவையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. மதுரை ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய ஒருங்கிணைக்கவே சிறிய மாற்றங்கள் மட்டுமே செய்யப்படுகிறது.

மெட்ரோ ரயில் திட்டம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்குவது குறித்தான ஆய்வு தற்போது நடத்தி வருகிறோம்.

மெட்ரோ ரயில் திட்டம் இரண்டு வகையாக நடத்தப்பட இருக்கிறது. உயர்நிலை பாலம் கொண்ட வழித்தடம் அமைக்க 2 வருடங்களும், சுரங்கப்பாதை வழித்தடம் அமைக்க 3 வருடங்கள் ஆகலாம், மொத்தமாக மதுரை மெட்ரோ ரயில் திட்டம் 4 ஆண்டுகள் திட்டமிடப்பட்டுள்ளது என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.