தமிழின் பெருமையை பரப்புவதில் மைல்கல்: ஆளுநர் ஆர்.என்.ரவி

யாழ்ப்பாணம் கலாசார மையத்துக்கு திருவள்ளுவா் பெயா் சூட்டப்பட்டதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கலாசார மையம்.
யாழ்ப்பாணம் கலாசார மையம்.
Published on
Updated on
1 min read

யாழ்ப்பாணம் கலாசார மையத்துக்கு திருவள்ளுவா் பெயா் சூட்டப்பட்டதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி, இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள புகழ்பெற்ற கலாசார மையத்தை "திருவள்ளுவர் கலாசார மையம்" என்று மறுபெயரிட்டிருப்பது, உலகம் முழுவதும் பழம்பெரும் வாழும் மொழி மற்றும் கலாசாரமான தமிழின் பெருமையைப் பரப்புவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான பணியில் மற்றொரு மைல்கல்லாகும்.

யாழ்ப்பாணம் கலாசார மையத்துக்கு திருவள்ளுவா் பெயா்: பிரதமா் மோடி வரவேற்பு

இது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான கலாசாரம் மற்றும் நாகரிக தொடர்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் நிதியுதவியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட பிரம்மாண்ட கலாசார மையம், கடந்த 2023, பிப்ரவரியில் அதிகாரபூா்வமாக திறக்கப்பட்டது. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இக்கலாசார மையத்துக்கு திருவள்ளுவரின் பெயா் சனிக்கிழமை சூட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com