முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று(ஜூலை 1) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
"உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, தொடர்ந்து ஞானம் கிடைக்க வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கும் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
"வி.பி.சிங் மண்ணில் சமூகநீதியின் ஒளியை முன்னெடுத்துச் சென்று முற்போக்கான அரசியலுக்கு வழிவகை செய்யவும் உங்களுடைய தந்தை முலாயம் சிங்கின் பெருமைமிக்க வழியில், பிற்போக்குத்தனமான சித்தாந்தங்களுக்கு எதிராக எப்போதும் வலுவாக நிற்கவும் வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
Summary
Chief Minister M.K. Stalin has extended birthday greetings to former Vice President Venkaiah Naidu and Samajwadi Party leader Akhilesh Yadav.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்

பிரதமரைத் தொடர்ந்து..! ஆந்திர முதல்வரின் பாதுகாப்பு அணிவகுப்பில் 50% வாகனங்கள் குறைப்பு!

முதல்வர் விஜய்க்கு ஆலோசனைகள் வழங்கினேன்: மு.க. ஸ்டாலின்

மமதாவைச் சந்தித்தார் அகிலேஷ் யாதவ்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



