பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் எனும் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
நீலநிறக் கொடியின் மையத்தில் யானை ஒன்றின் தும்பிக்கையில் பேனாவுடன் இருப்பதுபோன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்து வந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டாா். இதனைத் தொடா்ந்து, அக்கட்சியின் மாநிலத் தலைவராக ஆனந்தன் தோ்வு செய்யப்பட்டாா். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
மாநில தலைவர் ஆனந்தன் தனக்கு எதிராக செயல்படுவதாகவும் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதாகவும் கட்சியின் மேலிட நிர்வாகிகளுக்கு புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, பொற்கொடி புகார் அளித்த ஒரு வாரத்துக்குள், பகுஜன் சமாஜ் கட்சியின் பொறுப்பில் இருந்தே பொற்கொடி நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், புதிய கட்சி தொடங்குவதாக அவர் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற ஆம்ஸ்ட்ராங் வழக்கு எதிரி கைது

சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து! திருமாவளவன்
திரு.வி.க.நகரில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி போட்டி!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy


