
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில், தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் மூன்று பேர் பலியாகினர். பலியான மாணவர்களில் 2 பேரின் உடல்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே, ரயில்வே கேட் பகுதியில், பள்ளி வேன் மீது விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் மோதிய விபத்தில், திராவிடமணி என்பவரின் மகள் சாருமதி (16), விஜயசந்திரகுமார் என்பவரின் மகன் விமலேஷ் (10) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இவர்களது உடல்கள் உடல்கூறாய்வுக்குப் பிறகு அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி வேனில் இருந்த ஓட்டுநர் சங்கர் (47) மற்றும் மூன்று மாணவர்கள் காயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அதில், சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த திராவிடமணியின் மகன் செழியன் (15) சிகிச்சைப் பலனின்றி பலியானதாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் பலியான சாருமதியும், மருத்துவமனையில் பலியான செழியனும் அக்கா, தம்பி என்று தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்க.. சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.