
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ரயில்வே சார்பில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 மாணவர், 1 மாணவி உள்பட மூவர் பரிதாபமாக பலியாகினர்.
ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வாகன ஓட்டுநர், பள்ளிக் குழந்தைகள் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ரயில் மோதியதில் பள்ளி வேன் 50 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டு உருக்குலைந்ததில் மூவர் பலியாகினர். அவர்களில் சின்ன காட்டு சாகை சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த திராவிட மணியின் மகள் சாருமதி (16), அவரன் மகன் செழியன்(15), விஜயசந்திரகுமாரின் மகன் விமலேஷ்(10) ஆகியோர் பலியாகினர்.
இந்நிலையில், இவ்விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பங்களுக்கு ரயில்வே சார்பில் தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 2.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000-மும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர் பணியிடை நீக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.