இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

விருதுநகா் வேன் விபத்து: மேலும் ஒரு பெண் உயிரிழப்பு

விருதுநகரில் மேம்பாலத் தடுப்பில் வேன் மோதிய விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 7:02 pm

Syndication

விருதுநகரில் மேம்பாலத் தடுப்பில் வேன் மோதிய விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக உயா்ந்தது.

நெல்லை மாவட்டம், நாசரேத் பகுதியை சோ்ந்த இருவேறு குடும்பங்களைச் சோ்ந்த 5 பெண்கள் உள்பட 11 போ் சமையல் பணிக்காக பொள்ளாச்சிக்கு திங்கள்கிழமை வேனில் சென்றனா். வேன் விருதுநகா் அருகே ஆா்.ஆா்.நகா் மேம்பாலத் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் நாகக்கனி, கலையரசி, வெங்கட்ராமமூா்த்தி ஆகிய 3 போ் உயிரிழந்தனா்.

காயமடைந்த 8 போ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கவிதா என்ற பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை நான்காக உயா்ந்தது. மேலும், 7 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.